வியாழன், 31 டிசம்பர், 2009
வியாழன், 16 ஏப்ரல், 2009
உன்னை பற்றிய ஏன் நினைவுகளை
சில வலிகளையும்
சில நினைவுகளையும்,
சில சந்தோச தருணங்களையும்....
நான் இழந்து விட்ட உணர்ச்சி பற்றியும்.... நீயே எழுதி விடு...
ஏன் கற்பனைகளையும்...
உன் மீதான ஏன் கற்பனைகளையும்
நீயே எழுதிவிடு...
என்னை நீ நிராகரித்தது பற்றி
உன்னை நான் இன்னும் அதி தீவிரமாய் ஏற்று கொள்வது பற்றியும் அதன்
கோமாளித்தனத்தையும்
எனக்கு நீ உதவ முடியாததை பற்றி.....
சமுதாயத்தின் கோர பற்களுக்கு இரையான உன் மீதான எனது பிரியத்தையும்
நீயே எழுதி விடு..
நீ யாசிக்கும் நம்முடைய நட்பு,
அதனால் பரி போகும் என்னுடைய கனவுகளை பற்றியும் நீயே எழுதி விடு...
அடுத்த கட்ட சோதனைகளை பற்றியும் நீயே எழுதி விடு...
உன் ஆசைகளுக்கு கட்டு படாத என்னுடைய ஆசைகளை பற்றி ,
என்னுடைய கண்களும், என்னுடைய நினைவுகளும்
கவனமின்றி உன்னை தொட்ட ஏன் கைகளும்,
உன்னை தொட நினைத்த செயல்களும்.....
அது உனக்கு தொல்லை கொடுப்பதை பற்றி....
உன் கண்களும் கநீரை காணும் என கனவு காணும்
என்னுஇடைய கண்ணீரையும் சேர்த்து கவிதை சேர்த்து காரணம் இல்லாமல் நீயே எழுதி விடு....
உற்றார் , உறவினர் உடன் இருக்கும்
நகைத்து இருக்கும் சம்யதில்லும்....
உன் உயிரின் அன்பான பிடியில்
உன் உயிருடன் கலந்திருக்கும் இன்ப வேலை களிலும்,
காலம் உனக்கு ஏற்பத்தி இருக்கும் வேலைகளுக்கு மத்தியிலும்,
கஷ்டத்தின் மத்தியில் ,
இன்பதிற்கு மத்தியில்
இதை பற்றி எழுத எங்கே உனக்கு நேரம்
ஆனாலும் கவலை கொல்லாதே ஏன் கவிதைகளை பற்றி யோசித்தாவது விடு...
யோசிப்பதற்கு நேரம் எடுத்து கொள்ள தயக்கம் இருந்தால்
நீ தலை கோதும் நேரம் காற்றில் எழுதிவிடு....
திங்கள், 13 ஏப்ரல், 2009
ஜாதி.........
திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது.
திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது
ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாதது, தன்னைப் போல் வசதியான அல்லது தன்னை விட வசதியானவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்களே, அது என்ன ஜாதி உணர்வா?
தன் ஜாதிப் பெண்ணாக தேடி மணம் முடித்துக் கொண்டபின் வரதட்சணை கேட்டு துன்புறுத்தகிறார்களே, அவர்கள் எல்லாம் வேறு ஜாதிக்காரர்களா?
“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.
“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.
“நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்” என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.
ஜாதி விட்டு கல்யாணம் பண்ண தயாராக இருக்கிறவர்கள் கூட வர்க்கம் பேதம் கடந்து கல்யாணம் முடிக்க தயாராக இல்லை.‘டாக்டருக்குப் படித்திருக்கிற, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிற, நல்ல அழகான மணமகளுக்கு-நல்ல வேலையில் உள்ள மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிற வசதியான மணமகன் தேவை. ஜாதி தடையில்லை.’ இந்த விளம்பரங்களை நீங்க பாக்கறதில்லையா?
ஜாதி மாறி கல்யாணம் முடிச்சக் கூட, கலெக்டர் கலெக்டராதான் முடிப்பாரு. இல்லைன்னா டாக்டரை முடிப்பாரு.
சுய ஜாதியில் தன் படிப்புக்கும் தன் அந்தஸ்துக்கும பொருத்தமாக பெண் கிடைக்காததால், வேறு ஜாதியில் ‘தகுதி-திறமையான’ பெண்ணை கட்டிக் கொண்டு, தன் ஜாதி மக்களுக்காக ‘பாடுபடுகிற’ ஜாதிய உணர்வாளர்களும் இருக்கதானே செய்கிறார்கள். கிரிமனல்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் பாதுகாப்புத் தருகிற ஜாதி சங்கங்கள், தன் ஜாதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லையே.
இவ்வளவு ஏன்?
கொலை செஞ்ச ஜெயேந்திரனுக்கு ஆதரவா போராடுன பிராமணர் சங்கம், கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் அய்யருக்கு ஆதரவா வரலையே ஏன்? அதாங்க வர்க்க பாசம்.
நன்றி மதிமாறன்.....
வெள்ளி, 3 ஏப்ரல், 2009
திங்கள், 30 மார்ச், 2009
நண்பனும் நானும்..................
சோகத்தில் இருந்த நண்பனிடம் பேசிய பொழுது......
இது சோதனை முயற்சியே........
யாரும் கவலை கொள்ள வேண்டாம்.......
மீண்டும் சந்திக்கும் வரை........
ஆருயிர் தோழன்........
சனி, 28 மார்ச், 2009
இருந்தும் நான் இருகிறேன்
உன் வரலாற்றில் என்னை
உதிர்த்துவிடலாம் என்று நினைக்கிறாய்
எனது வெட்கங்கெட்ட தனம் உன்னை நிலை குலைய வைக்கலாம் ....
கண்ணீர் சொட்டுடனும்
என் தோள்கள் சரியவும்
ஆத்மார்த்தமான கதரல்களால் நான் சரிய
குனிந்த தலையோடும்
தாழ்ந்த கண்கள் உடனும்
நான் நொறுங்கி போவதை பார்க்க விரும்புகிறாயா ???
அல்லது
சமூகம் விரும்புகிறதா ????
எனது கவிதை செருக்கு உனக்கு காயம் ஏற்படுத்தலாம் .......
என்னுடைய நமட்டு சிரிப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை குறைக்கலாம்..
வரலாற்றின் அவமான குடிசைகளில் இருந்து எழுதுகிறேன்
வேதனைகளில் வேர் விட்டிருக்கும் மனதில் இருந்து எழுதுகிறேன்.............
திகிலான அச்சம் தரும் இரவுகளை பின் தள்ளி எழுதுகிறேன்............
அதிசயத்துடன் புலரும் காலையில் நான் எழுதுகிறேன் .............
தோல்வியின் அடிமையாக எழுதுகிறேன்..............
என்
வெற்றியை பிடுங்கிய சமுதாயத்தில்
ஏதும் செய்ய இயலாமல் எழுதுகிறேன் ....
உன்னாலும் எனக்கு உதவ முடியாத தருணத்தை
நம்ப முடியாமல் ஏற்றுக்கொண்டு
எழுதுகிறேன்.....
நான் எழுதுகிறேன் ........
மேலும்
நான் இருகிறேன்
இன்னும் இருகிறேன்...........
இருந்தும்
நான் இருகிறேன்...
சமுதாயத்தில் என்னை மறைத்து கொண்டு.................
வெள்ளி, 13 மார்ச், 2009
...........காலமும் ஆற்றாது.......
பரிணாம வளர்ச்சி.
ஒன்றாய் இருந்த
இனிய தருணங்கள் அவை.
காலம் நம்மை பிரித்து போட்டது
அடிக்கடி கடித விசாரிப்புகள்
தினம் தவறாத தொலைபேசி அழைப்புக்கள்
இது சில காலம் உனிடமிருந்து.
பின்பு அவப்போது என அது குறைந்து
எபோதாவது என்றாகி
இபோதோ
எபோதுமே இல்லாமல் போய்விட்டது
நீண்ட இடைவெளிக்கு பின்
எதேச்சையாய் நீ
பார்த்த பொழுது
மனதில் மகிழ்ச்சி :-)
முகத்தில் மலர்ச்சி :-)
ஆம்
எதனை கால எதிர்பார்ப்பு அது......
ஆனால் நீயோ
என்னை
பார்க்காதது போல திருபிவிட்டாய்..
பணியில் மூழ்குவது போல் பாவனை செய்தாய்....
என்றாலும்
உன் முகம் உன்னுடைய இம்சையை
காட்டி கொடுத்து...
என்னை தவிர்க்க நீ தவிக்கிறாய்..
உன் தவிப்பால் என்னை வதைகிறாய்...
உன்னை பார்க்காமலே
போயிருக்கலாம்
நீ
nimathiyaai இருந்திருப்பாய்....
எனக்கு
தெரியும்
காலம்
காயங்கள்
ஆற்றிவிடும்
ஆனால்
காதலை??????
நன்றி ( தினமலர்)
திருத்தி வெளியிட்டது
..........நிவாஸ் ............
வெள்ளி, 6 மார்ச், 2009
..............ஆருயிர் தோழனுக்கு...............
மடல்......
நண்பா நண்பா
தளர்ந்திடாதே
மழை போல் நீயும்
வீழ்ந்திடாதே......

நீ வீழ்ந்திடாமல் பச்சை வயல்
முளைத்திடாதே.......
நண்பா நண்பா பதறிடாதே
காய்ந்த மலர் போல் நீ
கருகிடாதே
உன் மிச்சங்கள் இன்றி
உரங்கள்
உருவாகாதே
நண்பா நண்பா
மறந்திடாதே
மாற்றம் என்பதை மறந்திடாதே
மாற்றம் எனபதை நீ
மறந்திடினும்
மாற்றமது உன்னை விட்டு
விலகிடாதே
ஆனாலும்
ஆனாலும்
பயபடாதே
பக்குவமாய் பார்த்துக்குவேன்
" மனம் என்ற நான் வாழும் வரை"
வியாழன், 19 பிப்ரவரி, 2009
என் டைரி ..............
தோழியே .....
உயிர் சுமத்திடும்
உணர்வு பூமியேஉன்னுள்
உணர்வுகள்,
நிகழ்வுகளைமுலாம் பூசியபடி
பதிவுடுகிறேன்
விமர்சனங்கள் ஏதுமின்றி ஏற்கிறாய்
எப்பொழுதும் எனக்கானவளாய்.......................
எப்பொழுதும் எனக்கானவளாய்.......................
எப்பொழுதும் எனக்கானவளாய்.......................
எப்பொழுதும் எனக்கானவளாய்.......................
உன்னுள் எப்பொழுதாவது நிகழ்ந்திடும்
அரைகுறை பிரசவங்களையும் கூடதயக்கங்கள்
ஏதுமின்றி ஏற்கிறாய்நிஜமான தாயன்போடு
உன்னுள் துக்கங்கள்,:-( :-( :-(
அழுகையையாருக்கும் தெரியாமல் புதைக்கிறேன்
சலனமின்றி விழுங்கி கொள்கிறாய்
கரிசல்காட்டு பூமியாய்
உன்னுள் கனவுகளை,
காதலைமுரசடித்தபடி பதிவிடுகிறேன்
நான் சோர்ந்து உறங்குகையில்முரசொலிகளை சத்தமாய் ஒலிப்பாய்
உன்னுள் எப்பொழுதுகளிலும்
இரவல் உணர்வுகளுடன் நுழைவதில்லை
நீயும் அனுமதித்ததில்லை
இதுவரைஎந்த சலுகையுடனும்
உன்னை பெண்ணின்இரகசிய முத்தமாய் மறைத்திடுவேன்
அந்தரங்கத்தின் முகமல்லவா நீ
உன்எல்லை கோடுகளிலயே வாழ்கிறேன்
நீ மட்டுமே தானே ஏற்பாய்
நீ மட்டுமே தானே ஏற்பாய்
நீ மட்டுமே தானே ஏற்பாய்
நீ மட்டுமே தானே ஏற்பாய்
நான் நானாகவே வாழ்ந்திட
என்டைரியெனும் நிகழ்கால சுமைதாங்கியே
சுமைகள் இறக்க முயலுகிறேன்
நீயோவழிப்போக்கனையும் ஏற்கிறாயடி
நன்றிகள் பல உனக்கு...
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009
காதல் .....................
ஒரு இளம்பெண் வீட்டின் பின்புறத்தில் திணையை காயவைத்து இருக்கிறாள். அதன் அருகில் ஒரு பெண்மான் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அவ்வப்போது வீட்டிற்குள்ளிருந்து வந்து திணையைப் பார்த்துக் கொண்டு , வீட்டுவேலைகளில் ஈடுபட்டு இருக்கிறாள். ஒருதடவை வீட்டின் பின்கதவைத் திறந்து பார்க்கிறபோது திணையை கோழிகளும், காகங்களும் தின்று கொண்டிருக்கின்றன. அதே நேரம் எங்கிருந்தோ வந்த ஆண்மான் ஒன்று பெண்மான் அருகில் மயங்கி நிற்கிறது. அந்த பெண் தயங்குகிறாள். காகங்களையும், கோழிகளையும் விரட்டினால் ஆண்மானும் ஓடிவிடும். யோசித்தவள் பேசாமல் பின்கதவை சாத்திவிட்டு வீட்டிற்குள் இருந்துவிடுகிறாள். அவளுக்கு சந்தோஷம் பொங்கி நிற்கிறது.
- சங்க காலத்துப் பாடல் ஒன்றிலிருந்து...
_______________________________________________________
வாழ்க்கையில் கிடைத்திருக்கும் ஒரே வண்ணம் அது. கலைகளின், வாழ்க்கையின் அர்த்தங்களை அது தருகிறது. அந்த வண்ணத்தின் நிறமே காதல்!
- மார்க் சாகல்
வாழ்க்கை என்னும் மலரின் தேன் துளிகளே காதல்
- விக்டர் ஹியுகோ
காதல் வயப்பட்ட இதயம் எப்போதும் இளமையாகவே இருக்கிறது
- கிரேக்க பழமொழி
காதலற்ற வாழ்க்கை வசந்தங்களற்ற, கனிகளற்ற மரத்தினைப் போன்றது.
- கலீல் கிப்ரான்
இனிமையான சந்தோஷமும்
வலிமிகுந்த காயமுமே காதல்
- பேர்ல் பேர்லி
கட்டுப்படுத்த முடியாத ஆசையின் மீது கட்டுப்படுத்த முடியாத ஆசை வைப்பதே காதல்.
- மார்க் ட்வைன்
ஒரு ஆண் தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான். பெண்ணோ ஒரு ஆணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்.
- ஆஸ்கர் ஒயில்டு
காதலே என் மதம்.
அதற்காக இறப்பேன்.
- ஜான் கீட்ஸ்
_______________________________________________________
காதலுக்காக திருமணம் செய்து கொள்வது சவாலானது.
கடவுளால் உதவிக்கு வர முடியாமல் புன்னகைக்க மட்டுமே முடிகிறது.
- ஜோஷ் பில்லிங்ஸ்
காதல் என்பது கற்பனை.
திருமணம் என்பது நிஜம்.
கற்பனைக்கும், நிஜத்திற்குமான முரண்பாட்டின்
தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது.
- கோயத்
காதல் என்பது நெருப்பு.
உன் இதயம் குளிர் காயப் போகிறதா
அல்லது
உன் வீடு தீப்பற்றப் போகிறதா
என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது.
- ஜோன் கிராபோர்ட்
காதலுக்கு பல முகங்கள்
வெட்கத்தோடு வளரும்
வசந்தகாலப் பூக்களைப் போல
ஓடையிலே கூடுகிற
சிறிய நீர்த்திவலைகள் போல
எண்ணற்றவை
கவனமாக அவற்றுள்ளே
நோக்கினால் உனது முகத்தையே
காணலாம் நீ
- ஹெகலர் ஷெப்பீல்டு
நான் உன்னை காதலிப்பேன்.
மரணமற்ற காதலாகும் அது.
சூரியன் குளிர்ந்து போகும் வரை
நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை
நான் உன்னை காதலிப்பேன்.
- ஷேக்ஸ்பியர்
_______________________________________________________
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்
- பாரதியார்
பழைய காலத்திலிருந்தே ஆண் பெண்ணை நேசித்து வருகிறான். பெண் ஆணை நேசித்து வருகிறாள் . எல்லா உயிரினங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஈர்ப்பு உண்டு. இனச் சேருதல், இனப்பெருக்கம் இதற்கான வழியே காதல். கொஞ்சம் மணம் வீசுகிற அற்புதமான ஏமாற்று.
- வைக்கம் முகம்மது பஷிர்
ஒரு பெண்ணை காதலிப்பதென்றால் அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள் அடிமுதல் முடிவரை காதலால் நீவி
சாபமேற்றுவது, உறைந்து போன ரத்தத்தில் கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்.
- சச்சிதானந்தன்
காட்டுத் தீ போல தேகத் தொடர்பு என்ற அடிப்படையில் பிறந்த காதலை புத்தித் தெளிவு என்ற அங்குசம் கொண்டு கட்டுப்படுத்தி பணிய வைத்தால்தான் அன்பு என்னும் விளக்கு வாடாமல் எரியும். இதுதான் என் ஆத்ம சோதனையின் முடிவு
- புதுமைப்பித்தன்
காதலென்பது நமது கதைகளைப் பொறுத்த வரையில் இருவர் செய்து கொள்ளும் நிச்சயதார்த்தம். உன்னை நான் காதலிக்கிறேன் என்று சொன்ன பாவத்திற்காக அவன் அவளையே கலியாணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது செத்துப் போக வேண்டும். விவாகரத்தைக் கூட அனுமதிப்பார்கள் போலிருக்கிறது. இந்த காதல் ரத்தை ஒருத்தி பிரயோகித்தால் நமது பண்பாடு கெட்டுப் போகுமென்று சொல்கிறார்கள்.
- ஜெயகாந்தன்.
தற்கால உலகம் காதலுக்கு லாயக்கற்றது என்பது என் கருத்து.
- கவிஞர் கண்ணதாசன்.
காதலும் ஆண் பெண் உறவுகளும் பெருமளவு மாறுதலடைந்து விட்டன. காதலின் அர்த்தத்திலிருந்து பாலுறவு பழக்கங்கள் வரை இனியும் பழைய அர்த்தத்தில் இல்லை. இங்குதான் காதலை எழுத முற்படும் கவி புதிய சவால்களை அடைகிறான்.
- மனுஷ்யபுத்திரன்
_______________________________________________________
தத்துவ மேதை பிளேட்டோ மாணவனாயிருந்த போது அவரது ஆசிரியரிடம் கேட்டாராம். "காதல் என்றால் என்ன? அதை எப்படி அறிவது?"
ஆசிரியர் எதிரே வளமாய் இருந்த கோதுமை வயலைக் காட்டி "அதில் மிக அற்புதமான, நேர்த்தியான தண்டு ஒன்றை நீ கொண்டு வா. காதலை அறிந்து கொள்ளலாம். ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. ஒன்றே ஒன்றுதான் கொண்டு வரவேண்டும்" என்றாராம். பிளேட்டோ கோதுமை வயல் முழுவதும் அலைந்து நீண்ட நேரம் கழித்து வெறுங் கையோடு வந்தாராம்.
ஆசிரியர் கேட்டாராம். "ஏன் ஒன்றும் பிடுங்கி வரவில்லை?' அதற்கு பிளேட்டோ சொல்லி யிருக்கிறார்." அற்புதமான தண்டுகளை பார்த் தேன். அதை விடவும் பிரமாதமானது முன்னால் இருக்கும் எனத் தோன்றியது. முன்னால் செல்ல செல்ல அவ்வளவு நல்ல தண்டுகளை காண முடியவில்லை. பின்னாலும் திரும்பி வர முடியாது. இப்படியே கழிந்து விட்டது"
"இதுதான் காதல்" என்றாராம் ஆசிரியர்.
சிறிதுநாள் கழித்து பிளேட்டோ ஆசிரியரிடம் "திருமணம் என்றால் என்ன" என்றாராம்.
ஆசிரியர் "அதோ அடர்ந்த கானகம் இருக்கிறது. அதில் ஒரே ஒரு மரத்தை வெட்ட வேண்டும். பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. நீ வெட்டியதுதான் மிக உயரமான மரம் என்றால் திருமணத்தை புரிந்து கொள் வாய்" என்றாராம்.
பிளேட்டோ கொஞ்ச நேரத்தில் ஒரு சாதா ரண மரத்தை வெட்டிக் கொண்டு வந்தாராம். "ஏன் இத்தனை சாதாரண மரத்தை வெட்டி னாய்" என்று ஆசிரியர் கேட்டிருக்கிறார். "என்னுடைய முந்தைய அனுபவத்தால் இந்த முடிவுக்கு வந்தேன். முதலில் இது நல்ல மரமாகவே தோன்றியது. இதை கடந்து போய் இதைவிடவும் மோசமான மரமே எதிர்ப் பட்டால், இதையும் இழக்க வேண்டி யிருக்குமே என்று வெட்டிவிட்டேன்" என்று பிளேட்டோ சொல்லியிருக்கிறார்.
"இதுதான் திருமணம் என்பது என் மகனே. காதல் என்பது மனிதனுக்கு நேர்கிற அற்புத மான அனுபவம். கையில் கிடைப்பதை விட கோதுமை வயலில் தவறி விடும்போதுதான் அதன் மகத்துவம் தெரிய வருகிறது. திருமணம் என்பது வெட்டிய மரம் போன்றது. சமரசம் செய்து கொள்கிறாய்" என்று ஆசிரியர் விளக்கினாராம்.
_______________________________________________________
நான் எப்போதும் யாரை என்னுடையவளென
நினைத்துக் கொண்டிருக்கிறேனோ
அவள் என்னை விரும்பவில்லை.
மாறாக
அவள் அதிகமாக
யாரை நேசிக்கிறாளோ
அவன் வேறொரு பெண்ணை
விரும்புகிறான்.
மேலும் என்னிடம் மகிழ்ச்சி காண்கிறாள்
வேறொரு பெண்.
இந்த பெண்ணையா
நான் விரும்பும் பெண்ணையா
அவள் விரும்பும் பெண்ணையா
என்னையா
அல்லது மன்மதனையா
இதற்கு
நொந்து நிந்திப்பது
- பத்ருஹரி
_______________________________________________________
வீடெங்கும் குப்பைக் கூளம்
முகமெங்கும் வேர்வை
கையெங்கும் சமையல்
மனமெங்கும் இல்லநெடி
சிறு புகைச்சல்
ஒட்டடை
வேளை பார்த்தா
நாதர் வந்தார்
அசடானேன்.
கேட்பதல்ல காதல்
தருவதுதான் என்று
தரையில் அமர்ந்தார்
என்னைக் காணேன்!
- -த.பிச்சமூர்த்தி
_______________________________________________________
அருமைக் காதலனே!
நட்சத்திரங்களை எழுத்துக் கூட்டிப் பார்த்தால்
உன் பெயர்தான் வருகிறது.
உனக்குப் பிடிக்கும் என்பதாலேயே
ஷெனாய் இசையும், பருப்புச் சாதமும்
என் பாசத்துக்குரியவை ஆகிவிட்டன.
உன் இதயத்து வால்வுகளில்
என் நினைவு துடிப்பது தெரியும். ஆயினும்-
எனக்கென்று சில குணங்கள்,ஆசாபாசங்கள்,
லட்சியங்கள் இருப்பதை
நீ உணர்வதேயில்லை.
காதலிக்கு மூளை இருக்கிறது என்பதே
கசப்பான உண்மையாய் இருக்கிறது உனக்கு.
அந்த மூளை வேலை செய்கிறது என்பது
அவமானமாய்த் தோன்றுகிறது உனக்கு.
உனக்கு கீழ்பட்டு உன்னையே மையமாக வைத்து
என் வாழ்க்கை இருக்க வேண்டும் என விரும்புகிறாய் நீ.
என் மனதை, உணர்ச்சிகளை எரித்து
என்னை இயந்தரமாக்கப் பார்க்கிறாய்.
அதுவே நல்ல இல்லறம் என்கிறாய்.
உடலை எரிப்பதற்கு சதி என்றால்
இதற்குப் பெயர் என்னவோ?
மன்னித்துவிடு..
என்னால் உடன்கட்டையேற முடியாது
உடலளவிலும் சரி
மனதளவிலும் சரி.
- -நாகராணி
_______________________________________________________
"நான் உயரே பறக்க விரும்புகிறேன்.
ஆனால் என்னுடைய துணை
எப்போதும் கூட்டினிலே
ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறேன்" என்றது கழுகு.
"என்னால் பறக்க முடியாது.
அவ்வாறு முயற்சி செய்யவும் எனக்கு விருப்பமில்லை.
ஆனால் என்னுடைய துணை வானில்
உயரே உயரே பறப்பதைக் காண
நான் பரவசமடைகிறேன்." என்றது பெட்டைக்கோழி.
அவர்கள் மணம் புரிந்து கொண்டனர்.
"ஆ.. இதுதான் காதல், என் அன்பே" கூவினர்.
கோழி அமர்ந்தது.
கழுகு உயரேப் பறந்தது ஒற்றையாக."
- -சார்லெட் பெர்கின்ஸ்
_______________________________________________________
என் கவிதைகளிலிருந்து
மலரை நீ எடுத்துவிட்டால்
என் பருவங்களில் ஒன்று
மடிந்து விடும்.
என் கவிதைகளிலிருந்து
காதலை நீ எடுத்து விட்டால்
என் பருவங்களில் இரண்டு
மடிந்து விடும்.
என் கவிதைகளிலிருந்து
ரொட்டியை நீ எடுத்து விட்டால்
என் பருவங்களில் மூன்று மடிந்து விடும்.
என் கவிதைகளிலிருந்து
சுதந்திரத்தை நீ எடுத்து விட்டால்
என் பருவங்களில் நான்கும் மடிந்து விடும்.
- ஷெர்கோ
______________________________________________________
ஒருவரையொருவர் காதலியுங்கள்.
ஆனால் அது அடிமைத்தனமாகிவிட வேண்டாம்.
உங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாயிருக்கட்டும் அது.
அடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள்.
அடுத்தவர் கோப்பையிலிருந்து குடிக்க வேண்டாம்.
சேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள்.
ஆனால் இருவரும் தனித்தே இருங்கள்.
உங்கள் இதயத்தை கொடுங்கள்.
ஆனால் அடுத்தவர் இதயத்தை வைத்திருக்க வேண்டாம்.
சேர்ந்தே நில்லுங்கள்.
ஆனால் மிக நெருக்கமாக வேண்டாம்.
ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது.
- கலீல் கிப்ரான்
புதன், 11 பிப்ரவரி, 2009
தமிழனுக்காக...................

இலங்கை விஷயத்தில் எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்க்கும் திறனைக்கூட இன்றைக்கு தமிழகத்துத் தமிழர்கள் சிலர் இழந்துவிட்டனரோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இவர்கள் திரும்பத் திரும்ப ராஜீவ் கொலைக்கும் சிங்கள ராணுவத்தின் தமிழின அழிப்பு படுகொலைக்கும் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது எதற்காக? புலிகளை ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த ஒட்டுண்ணிகளின் நோக்கமல்ல… தமிழருக்கென்று ஒரு தனித்த அடையாளமோ, தமிழரின் தனிப்பெரும் ஆட்சியில் ஒரு தேசமோ உருவாகிவிடக் கூடாதென்பதில் இவர்கள் உறுதியோடு உள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய அரசை விட இவர்கள்தான் மிக உறுதியோடு உள்ளனர்.
தமிழினத்தை பலி கொடுத்து சிங்களவனின் இறையாண்மையைக் காக்க, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழர் பணத்தில் சுகஜீவனம் நடத்திக் கொண்டிருக்கும் இந்தக் கும்பலுக்குத்தான் என்னவொரு அக்கறை!
ஆனால் உண்மை நிலையை நேரில் பார்த்த வெளிநாட்டுக்காரர்கள் இலங்கையைப் போன்ற ஒரு கொடிய தேசத்தை உலகில் எங்கும் பார்க்க முடியாது என ராஜபக்சேவின் கொடுங்கோலாட்சிக்கு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இந்த உண்மை, ராஜபக்சேவால் ‘ஸ்ரீலங்கா ரத்னா’வாகப் பார்க்கப்படும் "ஹிந்து" ராம்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.
அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் புரூஸ் பெயின். இலங்கையில் தமிழருக்கு எதிரான இனப் படுகொலையை உலகுக்கு இவர் எடுத்துக் கூறி வருகிறார். இலங்கையில் தமிழர்களும் சிங்களர்களும் சேர்ந்து வாழவே முடியாது. தனிநாடு ஒன்றே இதற்குத் தீர்வு என்று கூறியுள்ளார் ஃபெயின்.
சமீபத்தில் சென்னை வந்திருந்த இவரது பேட்டியை வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர். நன்றி ......
அந்தப் பேட்டி:
“இலங்கையில் தமிழின அழிப்பு அதாவது இனப்படுகொலை நடக்கிறது. இதைச் செய்யும் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே, ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறேன்” என்று பலரின் புருவங்களை உயரச் செய்தார். அவரைச் சந்தித்தோம்.
இலங்கையில் நடப்பது தமிழினப் படுகொலை என்று எதனடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்?
“தமிழருக்கு எதிரான இனவெறியை பல ஆண்டுகளுக்கு முன்பே மகாவம்சா, தர்மபாலா ஆகியோர் சிங்களவர் மனதில் பதிந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். கிறிஸ்துவர்களுக்கு ஏசுநாதர் எப்படியோ அப்படி சிங்களவர்களுக்கு தர்மபாலா. அதற்குப் பின் வந்த புத்தத் துறவிகளும் தமிழினத்துக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மூவாயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், மூவாயிரம் பேரின் கதி என்ன ஆனதென்றே தெரியவில்லை? ஆயிரம் தமிழர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இரண்டாயிரம் பேர் ஊனம் அடைந்திருக்கிறார்கள். ராணுவத்துடன் நடந்த சண்டையில் உயிர்நீத்த புலிகளின் எண்ணிக்கையை இதில் சேர்க்கவில்லை..”
அதற்காக கோத்தபாய, சரத் பொன்சேகா ஆகியோர் மீது மட்டும் வழக்குத் தொடர்வது ஏன்?
“இவர்கள் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இன அழிப்புக்கெதிரான அமெரிக்கக் குற்றவியல் சட்டப் பிரிவு, 1091-ன்படி இவர்கள் செய்வது தண்டனைக்குரிய குற்றம். அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருக்கும் அவர்கள், அமெரிக்கச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும். அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை கூட கிடைக்கலாம். இலங்கை ராணுவம் மேற்கொண்ட இனஅழிப்புக்கு ராணுவத்தில் உயர் பதவியில் உள்ள இவர்கள் இருவருமே முக்கியப் பொறுப்பு. இலங்கையின் தமிழின அழிப்பை அம்பலப்படுத்தும் ஆதாரங்களை ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாகத் தொகுத்திருக்கிறேன் (அதைக் காண்பிக்கிறார்). நாடு திரும்பியதும் இலங்கைக்கு ராணுவத்துக்கு எதிரான இந்த வழக்கைப் பதிவு செய்வேன்.”
இலங்கையில் தமிழின அழிப்பு எந்தெந்த வழிகளில் நடக்கின்றன?
“தீவிரவாத அழிப்பு என்கிற பெயரால் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவிகளே கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் தடை செய்த பால் பவுடரை வழங்கி, தமிழர்களைக் கொன்று வருகிறது, இலங்கை அரசு. தமிழர் பகுதிகளில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கிடையாது. உயிர்போகும் நிலையிலும், மாட்டு வண்டிப் பயணம்தான். அப்படியென்றால், தமிழர்கள் மீண்டும் கற்கால வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்களா? என்று சந்தேகம் வருகிறது. அங்கு அரங்கேறும் இன அழிப்பு வெளியே தெரியக் கூடாது என்பதற்காகவே செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை விரட்டி விட்டார்கள்.இதுவரையில் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகளில் ஒருவர்கூட தண்டிக்கப்பட்டதே இல்லை. தமிழக முகாம்களில் உள்ள அகதிகளிடம் பேசினால் இன்னும் பல இனஅழிப்பு அவலங்கள் அம்பலமாகும்.”
இலங்கையில் நடப்பது தமிழன அழிப்பு என்கிற உங்கள் வாதம், உலகநாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுமா?
“இனஅழிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான முதல் அமெரிக்க குடிமகன்கள் கோத்தபாய ராஜபக்சேவும், சரத் பொன்சேகாவும்தான். இவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்தால் சர்வதேச ஊடகங்களின் கவனம் இந்தச் செய்தியின் மீதுபடும். அதன்மூலம் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்”.
நீங்கள் ஒரு மனித உரிமைப் போராளி என்பதால் இந்தக் கேள்வி. இலங்கையில் மனித உரிமையை மீறுபவர்கள், தமிழீழ புலிகளா? இலங்கை அரசா?
“தமிழன அழிப்பு பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். அதே நேரத்தில் தீவிரவாதத்தை அழிக்கிறேன் என்ற போர்வையில் தமிழ்ப் பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவிக்கும் இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய மனித உரிமை மீறல்; கிரிமினல் குற்றம்”.
அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமாவின் கவனத்துக்கு இப் பிரச்னையை கொண்டு செல்வீர்களா? அவரிடம் புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்வீர்களா?
“எல்லோர் எண்ணங்களும் ஒரே மாதிரி இருக்காது. இன்றைய சூழ்நிலையில் புலிகள் பற்றி பேசுவது, பிரச்னையை திசை திருப்பிவிடும். கவனிப்பதற்கு காஸா, ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தா என்று பிரச்னைகள் இருக்கும்போது இலங்கைப் பிரச்னை என்பது வெள்ளை மாளிகைக்கு இரண்டாம் தரம்.”
ஈழப் பிரசனைக்கு தனி நாடு தீர்வாகுமா?
“இந்த நேரத்தில் தனிநாடு பற்றி பேசுவது சரியாகாது. இதற்கு முன்பு தமிழர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தகளை இலங்கை அரசு குப்பையில் போட்டு விட்டது. அந்நாட்டின் உச்ச நீதிமன்றமும் தமிழின அழிப்புக்குத் துணை போகிறது. இந்த நிலையில், தமிழ் மக்களுக்கு தனியுரிமையும் பாதுகாப்பும் தேவைதான்”.
இலங்கையில் அரங்கேறும் தமிழின அழிப்பை இந்தியா கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
“இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் இந்தியா ஈடுபாடு காட்டுவதில்லை என்பது உண்மை. ‘தமிழீழம் உருவானால் காஷ்மீர், அஸ்ஸாம், தமிழ்நாட்டு மக்கள் தனிநாடு கேட்பார்கள்’ என்று இந்தியா காரணம் சொல்லலாம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை இந்தியா பிரித்துக் கொடுத்தது சரியா? ‘தமிழீழம் உருவானால் தனித் தமிழ்நாடு கேட்பார்கள்’ என்று காரணம் சொல்வது, வெறும் கண்துடைப்பு. அதே நேரத்தில் பாகிஸ்தானும், சீனாவும் இலங்கையை ஆதரிக்கிறது.”
இலங்கை அரசின் தமிழன அழிப்புக்கு இறுதித் தீர்வுதான் என்ன?
“சிங்களவரான சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டார். சிங்களவர்களுக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்கள் மூலம் அந்நாட்டு அரசுக்கு எதிராக சிங்களவர்களின் ஆதரவையும் திரட்டவேண்டும்.
ஒன்றாக இருந்த சிங்கப்பூர், மலேசியா தனித்தனி நாடுகளாகப் பிரிந்து இன்றைக்கு சிறப்பாகவே இருக்கின்றன. இலங்கையில் எந்த இடம் யாருக்கு என்கிற விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் நாட்டைப் பிரிப்பதைத் தவிர வேறுவழியில்லை. எனக்கு அறுபது வயதாகிறது; 41 நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இருபத்தி நான்கு மணிநேரமும் மனித உரிமைக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்துப் போராடி வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்,
வெள்ளி, 6 பிப்ரவரி, 2009
slumdog millionare
லவ்leen Tandan (co-director: India)
Writers:Simon Beaufoy (screenplay) andVikas Swarup (novel)
இந்த படத்த பாகரதுகு முன்னாடி எனக்கு பெருசா ஒரு எதிர்பார்ப்பும் இல்ல......
கடந்த வாரம் சனி கிழமைல நண்பர் வீட்டுக்கு போனேன்.....
நண்பர் புதுசா படம் பாக்கலாம்னு சொல்ல நானும் "slumdog millionare" படம் பாக்க ஆரம்பிச்சோம்......
Directors:Danny Boyle லவ்leen Tandan
Awards:Nominated for 10 Oscars.
அப்டின்னு பத்திரிகைல எல்லாம் பக்கம் பக்கம் பக்கமா எழுதுறதால எனக்கு அதிகமா நம்பிக்கை இல்ல.......
நல்ல எதிர்பார்போட போன பெரிய ஆப்பா வைபானுக அப்டிங்கரதுனால
எந்த எதிர் பார்ப்பும் இல்லாம பாக்க ஆரம்பிச்சேன்........

கற்பனை கதை அப்டின்னு சொனாலும் ரொம்ப nallaa irunthathu.........
இடையில் அழகான காதல் கதை.........
Simply beautiful and touching……..
8/10 that is my mark for this film………








