மடல்......
நண்பா நண்பா
தளர்ந்திடாதே
மழை போல் நீயும்
வீழ்ந்திடாதே......

நீ வீழ்ந்திடாமல் பச்சை வயல்
முளைத்திடாதே.......
நண்பா நண்பா பதறிடாதே
காய்ந்த மலர் போல் நீ
கருகிடாதே
உன் மிச்சங்கள் இன்றி
உரங்கள்
உருவாகாதே
நண்பா நண்பா
மறந்திடாதே
மாற்றம் என்பதை மறந்திடாதே
மாற்றம் எனபதை நீ
மறந்திடினும்
மாற்றமது உன்னை விட்டு
விலகிடாதே
ஆனாலும்
ஆனாலும்
பயபடாதே
பக்குவமாய் பார்த்துக்குவேன்
" மனம் என்ற நான் வாழும் வரை"
இப்படிக்கு
மனம் எனும் மாயவன் .........................





இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவணக்கம் தோழர். தற்செயலாக தங்களின் தளம் பார்த்தேன். ஏதோ வேதனை மட்டும் இருக்கிறது உங்களிடம் என்பது நன்றாக தெரிகிறது. கவலைகளை மறக்க முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள் தங்களின் கவிதைகளுக்கு .............
பதிலளிநீக்கு