ஞாயிறு, 28 டிசம்பர், 2008

உண்மை பாகம் இரண்டு

சென்ற பதிவில் நாத்திகர்கள், மதத்தின் வளர்ச்சிக்கு மிக மிக அவசியம் என்றோம் . எப்படி??



மதத்தின் வளர்ச்சிக்கு அவர்களுக்கும் பங்கு உண்டு......



உதாரணமாக புத்தரை எடுத்து கொள்வோம்..



புத்தரின் காலத்தில் இந்து மதம் மிகவும் வலிமையாக இருந்தது.

அது சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கைகளும் ,

அதிக சடங்குகளும்,
ஏழை மக்களின் பணத்தை பிடுங்கும் சடங்குகளும்,

ஏழை மக்களை உறிஞ்சும் மத தலைவர்களும் ,

மேலும் மதம்

அரசியல் , பதவி , ஆகியவற்றில் தனுடைய ஆதிக்கம் செலுத்தி இருந்தது........



மேலும் மக்களின் மொழி மதிப்பை இழந்திருந்தது ....



பூசாரிகளின் மொழி அனைத்தையும் ஆதிகபடுதியது.....





இந்த சமயத்தில் தான் புத்தர் தன் எளிய மக்களை கவர்ந்தார்....

கடவுள் மொழியை மதவாதிகள் பேசிய நேரத்தில் மக்களின்
மொழி பேசி மக்களை தெளிவு படுதினர் .


சம்பிரதாயம் , சடங்குகள் வேண்டாம் , கடவுளை அடைய ஆசையை அருதேரிந்தால் போதும் என்ற எளிய தத்துவத்தை பரப்பினர்.



அது வரை தன்னை எதிர்க்க ஆளில்லாமல் இருந்த இந்து மதம் அடிவாங்க ஆரம்பித்தது.

இந்து மதவாதிகளின் கருத்துபடி அவர் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.

அவர் ஒரு இந்து மத எதிர்ப்பாளர்.






இந்து மத நம்பிக்கையில் மூழ்கி திளைத்திருந்த மக்களிடம் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.....

மக்களை முறையாக சிந்திக்க தூண்டினார்..

மிகவும் வேக மாக பரவியது இவருடைய கருத்துக்கள்.

இதன்னலயே திராவிட கட்சிகள் ,

பெரியார், அண்ணா போன்றவர்கள்

தங்கள் கொள்கைக்கு ஆதரவாக திருக்குறளை, சிலபதிகாரத்தை வைத்து இந்து மதத்தை எதிர்த்து போராடினார்கள்..( அது ஒரு பெரிய கதை....)

இவ்வாறு ஒரு கடவுள் நம்பிக்கை கொண்டவன் தன்னை சரி பார்த்து கொள்ள , மூட நம்பிக்கைகளில் இருந்து விடு பட நாத்திகவாதி மிக முக்கிய தேவையாக இருக்கிறான்.

நாத்திகவாதி இல்லாமல் மதத்தின் வளர்ச்சி இல்லை...........

ஒவ்வொரு மிக பெரிய ஞானி களும் ( அதி சங்கரர் , ரமணர் )

தங்களுடைய காலத்தில் ஒரு சமுதாயத்தில் புரட்சி செய்து மதத்தை சுத்த படுத்துகிறார்கள்.....

ஆக மதத்தை சுத்தப்படுத்தும் பனி என்பது ஞானிகள் மட்டுமல்ல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட காலத்தின் சுழற்சியில் செய்து வருகிறார்கள்.

தொடரும்..............

வெள்ளி, 26 டிசம்பர், 2008

எது உண்மை.....

சென்ற வாரம் தமிழ் சங்கத்தில் ஒரு சொற்பொழிவு நடந்தது ....என்னுடைய கருத்துகளுக்கு வலு சேர்க்கும் என்ற ஆவலில் சென்றேன்.......


ஆத்திகவாதிகளும் , நாத்திகவாதிகளும் கலந்து கொண்டார்கள்.
கடவுள் உண்டு என்ற வாதமும் கடவுள் இல்லை என்ற வாதமும் ஒரே மேடையிலே ஒலித்தால் எப்படி இருக்கும்??
இருவரும் எவாறு தங்களுடைய கருத்தை முன் வைப்பார்கள் தங்களுடைய கருத்தை அறிவுபூர்வமாக எடுத்து வைப்பார்களா? அல்லது உணர்ச்சி பூர்வமாக எடுத்து வைப்பார்களா என்று எண்ணி கொண்டு சென்றேன்.....




சில கருத்துக்கள்,

ஏன் கடவுள் இல்லை என்று சொல்கிறாய் ?
ஏன் கடவுள் இல்லை என்று சமுதாயத்தில் குழப்பம் விளைவிகிறாய்??


நான் எங்கே அப்பா அப்படி சொன்னனேன்?

பரிசுத்த ஆவியை , பிதாவை வழிபடும் கிறிஸ்துவர்களிடம் சென்று சிலை வழிபாடை ஏற்று கொள்ள சொன்னால் ஏப்படி அவர்களால் ஏற்று கொள்ள முடியும்... ???

திசையை வழிபடும் முஹமதியர்களிடம் சென்று பிதா , பரிசுத்த ஆவியை வழிபட சொல்ல முடியுமா ???

ஆயிரகணக்கான கடவுளர்களை தனிடம் வைத்துள்ள இந்து மதத்தை வழிபடும் நண்பரிடம் சென்று சொன்னால் என்ன வாகும்??( தற்போது கிரிக்கெட் வீரர் டோனிகு ராஞ்சியில் சிலர் கோவில் கட்ட ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன????)


இவர்கள் யாரும் பிற மத வழிபாடுகளை ஏற்று கொள்வதே இல்லை......

இவர்கள் மூவர் சொல்வதையும் சேர்த்து நான் சொல்கிறேன்.......

கடவுள் இல்லை என்று.........

இது எப்படி சமுதாயத்தில் குழப்பம் விளைவிக்கும் ?????



"Atheist are important to rejuvenate each religion"......






அடிமைக்கு உடல் மட்டுமே மற்றவனுக்கு அடிமை......


ஆனால்

பக்தி மானுக்கு உடல் , மனம்
இரண்டுமே மற்றவனுக்கு அடிமை ஆகிவிடுகிறது....







ஐந்து வயது சொந்தமாக சிந்திக்க தெரியாத குழந்தையிடம் ஒரு பொருளை காட்டி கும்பிட சொல்வதும், அதற்கு பூஜைகள் செய்ய கற்று கொடுப்பதும்...... ஆத்திகர்களில் பனி...












நானோ இருபது வயதுடைய சிந்திக்க தெரிந்த மனிதனிடம் தான் கடவுள் இல்லை என்று சொல்கிறேன்.....












இதில் எது மிகப்பெரிய பாவம் ???







ஐந்து வயது குழந்தையிடம் கருத்தை கட்டாயம் செய்ய சொல்வதா ??









அல்லது






சிந்திக்க தெரிந்த மனிதனிடம் கருத்தை சொல்வதா?


தொடரும் .........

















வெள்ளி, 19 டிசம்பர், 2008

படமும் செய்தியும்

இயற்கைக்கு முன்னால்

சனி, 13 டிசம்பர், 2008

அன்பு நண்பர்களுக்கு,

அன்புள்ள என் உயிர் நண்பர்களுக்கு, ,


முதல்

முறையாக


என் வலைப்பதிவை

பார்வையிட வந்திருக்கும்

உங்களை


வருக

வருக

வருக

வருக






என்று இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்......

வெள்ளி, 12 டிசம்பர், 2008

.......தனிமை .......

தனிமை

உன்னை பற்றி சிறிது எழுதலாம் என்று நினைக்கிறேன்,

நீ எனக்கு இழைக்கும் இன்னல்களை பற்றி,

நீ எனக்கு வழங்கும் ஞானத்தை பற்றி,

உன்னால் நான் உணரும் உணர்வை பற்றி,

நீ எப்படி என்னுள்

நுழைந்தாய்?


கலந்தாய்?


நான் உன்னை வென்று விட நினைத்தேன்


ஆனால்


நீ


என்னை கொன்று விட்டாய்.....



உன்னிடம் நான் தோல்வி அடைவேனோ

என்று அஞ்சுகிறேன்


ஆனால்


அஞ்சுவது


பேதைமை என்பதால்


தோல்வியை உனக்கு பரிசளிக்க விரும்புகிறேன்....


நீ எனுடநேயே வாழ்கிறாய்

ஆனால்


மனிதர்களிடம் மறைந்து கொள்கிறாய்,



ஏன் நிழலை போல


நீயும் நிழல் போல படிகிறாய்



உன்னால்



நான் படும் உள்ளக் குமுறல்களை


எழுதுவதை தவிர என்னால்



ஏதும் செய்ய முடியாது....

நீ


எனக்கு


ஆசிரியனாக ,



நண்பனாக,



பகைவனாக ,


இறைவனாக,



மாசு மருவற்று இருகிறாய் ...


ஆனாலும் கூட உன்னை எனக்கு பிடிக்கவில்லை.....

கண்டிப்புடன் கண்காணிக்கும்

எவரையும்


யாருக்கும் பிடிக்காது....



உறங்குவதற்கு
இமைகளை
இணைக்கும்
தருவாயில்
உன்னை
உணருகிறேன் ...


உறக்கத்தின்
நடுவில்
உன்னை
உணர்கிறேன் ....



உறங்கி
விழிக்கையில்
உன்னை
உணர்கிறேன்.....




நீ தரும் பலன்

கொஞ்சமா?
நஞ்சமா?



பொறுமையை போதிக்கிறாய்,

யோசிக்க வைக்கிறாய்,

யோசித்ததை யோசிக்க வைக்கிறாய்,


சில நேரம் புரிய வைக்கிறாய்,


பின்பு,


புரியாததை புரிய வைக்கிறாய்,


என்னை பற்றியும் புரிய வைக்கிறாய்,,,,,



எதுவானாலும்

உன்னை வெற்றிகொள்ள





உன்னிடம்









தாழ்ந்துஇருக்கிறேன்




ஆனால்


தனிமையே




உன்னிடம்


தாழ்ந்து இருக்கிறேன்


ஆனால்



வீழ்ந்து விட வில்லை............




தனிமையைபற்றி



தமிழன்


நிவாஸ்

Nivaz

நிவாஸ்

.
.
.
.
.
.
.

Nivaz



.
.
.
.
.
.
.
Nivaz
.
.
.
.
.
.













Nivaz
.
.
.
.
.
.
.
Nivaz





.
.
.
.
.
.
.
.
.
.
.

















நண்பனின்







மகிழ்ச்சியில்.........










நண்பன்......................